நவீன வசதிகளுடன் கூடிய மதுபான பார்களை திறக்க தமிழக அரசு முடிவு
சென்னை: தமிழக முழுவதும் 'எலைட் ஷாப்' என்ற பெயரில் பிரம்மாண்டமான மதுபான பார்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள குடிமகன்களை திக்குமுக்காட வைத்தது. டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசு ஆண்டுத் தோறும் அதிகளவில் வருமானம் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.14,965 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு இதனை மேலும் அதிகரித்து ரூ.20,000 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய ஏசி பார்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'எலைட் ஷாப்' என்ற பெயரில் அமைக்கப்பட்ட உள்ள டாஸ்மாக் பார்களுக்கான இடங்களை டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண பார்களிலேயே தினமும் 'குடி'மகன்களின் கூட்டம் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக வசதிகளுடன் கூடிய 'எலைட் ஷாப்' பார்களில் மதுபான பிரியர்கள் வருகைக்கு குறைவு இருக்காது. எனவே இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 'எலைட் ஷாப்கள்' குறித்த செய்தி மதுபான பிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications