செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த வாலிபர் பலி
செங்கோட்டை: செங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த வாலிபர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி பாண்டியன். இவரது மூத்த மகன் காசி என்ற கருணாகரபாண்டியன். இவருக்கு கல் அடைப்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்யவும், அதனுள் உள்ள சதையை நீக்கம் செய்யவும் முடிவு செய்த மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்தியுள்ளனர். மயக்க மருந்து செலுத்திய பின்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், திடீரென இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு கூடி விவாதம் செய்தனர்.
தகவல் அறிந்த தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் மருத்துவமனை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் பேசி இறந்தவர் உடலை தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications