திருச்சியில் ஒரு வருடமாக கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது
திருச்சி: ஒரு வருடமாக கல்லூரி மாணவி ஒருவரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த கார் டிரைவரை திருச்சி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி தென்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50 செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் சுபஸ்ரீ (17) திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் முதல் ஆண்டு படித்து வருகிறார்.
ரவிச்சந்திரன் வீட்டு மேல் மாடியில் தியாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரது மகன் ரெங்கநாதன் (26) கார் டிரைவராக உள்ளார்.
ரெங்கநாதன் சுபஸ்ரீயும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் மாணவி சுபஸ்ரீயை, ரெங்கநாதன் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ரெங்கநாதன் தொடர்ந்து சுபஸ்ரீயை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சுபஸ்ரீ தனது தந்தை ரவிச்சந்திரனிடம் கூறியதையடுத்து அவர் கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கோட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து ரெங்கநாதனை கைது செய்தார்.
மேலும் மாணவி சுபஸ்ரீயை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications