கட்டண உயர்வு எதிரொலி: இனிமேலாவது பஸ்ஸில் வசதிகள் அதிகரிக்குமா என பயணிகள் எதிர்பார்ப்பு!
சென்னை: கிட்டத்தட்ட ஆம்னி பஸ்களுக்கு இணையான கட்டணத்தை கொண்டு வந்து விட்டது தமிழக அரசு. இனிமேலாவது அரசு பஸ்கள் சிறப்பான முறையில் பயணிகளுக்கு சேவை புரியுமா, குறைந்தபட்சம் மூட்டைப் பூச்சி இல்லாமல் பஸ் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
அரசு பஸ்களுக்கான கட்டண உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டது. தனியார் பஸ்களுக்கு நிகரான கட்டண உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் ரயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் இந்த விலை உயர்வுக்கு மத்தியிலும், அரசு பஸ்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றிலும் போய் விடவில்லை. இனி்மேலாவது பயணிகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பே மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அல்ட்ராடீலக்ஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டு படு ஓட்டையான பஸ்களை ஓட்டி வரும் செயலை அரசு நிறுத்த வேண்டும் (சமீபத்தில் சென்னையிலிருந்து இப்படி ஒரு பஸ்ஸை நாகை மாவட்டத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கியது. இதையடுத்து மக்கள் பஸ்ஸை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.)
மூட்டைப் பூச்சித் தொல்லை இல்லாத வகையில் பஸ்களை சுத்தபத்தமாக வைத்துக் கொள்வது.
பஸ்சுக்குள் ஏறியவுடனேயே முடை நாற்றம் வீசும் அளவுக்கு ஆரோக்கியக் குறைவு இருப்பதை மாற்றி சுகந்தமான, ஆரோக்கியமான சூழலுடன் கூடிய பஸ்களை இயக்குவது.
அடிக்கடி விபத்துக்களில் சிக்காமல் பஸ்களை செலுத்துவது, அடிக்கடி பஸ்கள் பழுதடையாமல் பார்த்துக் கொள்வது, பயணிகள் உட்கார்ந்து சவுகரியமாக பயணிப்பதற்கு ஏற்ற சீட் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் எழுந்துள்ளன.
தற்போதைய கட்டண உயர்வுக்குப் பின்னர் அரசு பஸ்களுக்கும், தனியார் ஆம்னி பஸ்களுக்கும் இடையிலான கட்டண வித்தியாயசம் கிட்டத்தட்ட ரூ. 80 என்ற அளவில்தான் உள்ளது. எனவே கட்டண உயர்வுக்குப் பின்னர் பாதி ஆம்னி பஸ்களாக மாறியுள்ளன அரசு பஸ்கள். ஆனால் தனியார் ஆம்னி பஸ்களில் உள்ள வசதிகளில் ஓரளவாவது அரசு பஸ்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications