விஜயகாந்த் வராததால் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்காமல் இருக்கும் அதிகாரிகள்!
ரிஷிவந்தியம்: மக்களுக்கு இலவசமாகத் தருவதற்காக ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்திறங்கியுள்ளன இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பேன் போன்றவை. ஆனால் தொகுதி எம்எல்ஏவான விஜயகாந்த் வராததால் அவை இன்னமும் யாருக்கும் வழங்கப்படாமல் குடோனில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி இலவச கிரைண்டர், மிக்சி, பேன் முதலியன வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பயணாளிக்கு இந்த இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் பேன் வழங்குவதற்கான பணி நடைபெற்று வருகின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த பணியினை 100 சதவீதம் முழுமையாக முடித்திட மாவட்ட கலெக்டர் மணிமேகலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயணாளிகளின் பட்டியலையும் இறுதிசெய்து சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டன.
ஆனால் திருக்கோவிலூர் தாலுக்காவில் இந்த பணி தொடங்காமல் இருந்ததை அறிந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டார் கலெக்டர் மணிமேகலை.
ஆனால் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் இந்த இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் பேன் வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.
இது குறித்து காரணம் கேட்டபோது, இலவச பொருட்கள் கொடுக்கும்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என அரசிடம் இருந்து தகவல் வந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சிதலைவர் விஜயகாந்த் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications