இரண்டு முகத்தைக் காட்டுகிறார் ஜெ.-அதில் எதை நம்புவது?: சுப. வீரபாண்டியன் கேள்வி
கரூர்: முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் கேட்டதை விடக் கூடுதலாக மத்திய அரசு பணத்தை அள்ளித் தந்தது உண்மையா? அல்லது நிதியே தரவில்லை என்பது உண்மையா? ஜெயலலிதாவின் இரண்டு முகங்களில் எந்த முகத்தை நாம் நம்புவது? என்று கேட்டுள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்.
கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன் கூறுகையில்,
பேருந்துக் கட்டணம், ஆவின் பால் விலை எல்லாவற்றையும் மிகக் கடுமையாக உயர்த்தியுள்ள ஜெயலலிதா, அதற்கான பழியை மத்திய அரசின் மீதும், முந்தைய திமுக அரசின் மீதும் சுமத்தி இருக்கிறார். கடந்த 6 மாத காலமாக மத்திய அரசிடமும், திட்டக் குழுவிடமும், நிதி உதவி கோரி இருந்ததாகவும், அதற்கு இன்றுவரை எந்தப் பயனும் இல்லை என்றம் அவர் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு நிதி உதவி தராத காரணத்தினால் தான் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உண்மைக்கு மாறான மிகப்பெரிய பொய் ஒன்றை அவர் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
மத்திய அரசிடம், தான் கேட்டதைவிடக் கூடுதல் நிதி பெற்று வந்ததாக மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் தம்பட்டம் அடித்துக்கொண்டார். அந்த செய்தி 07.07.2011ஆம் நாளிட்ட நமது எம்.ஜி.ஆர். நாளேட்டிலேயே வெளிவந்துள்ளது. மத்திய அரசிடம் 23 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்டதாகவும், அவர்களோ 23,535 கோடி நிதி தந்துள்ளதாகவும் கூறிய அவர், தன் சாதுரியத்தால் கூடுதல் நிதி பெற்றுவிட்டதாகப் பெருமை பேசினார்.
அதுமட்டுமல்லாமல், இன்னொரு செய்தியையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். மத்திய ஆட்சியில் பங்கேற்றிருக்கும் திமுக அரசு பெற்று வந்த நிதியைவிடத் தான் 3,467 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.
நமக்குப் புரியவில்லை... இரண்டில் எது உண்மை? கேட்டதை விடக் கூடுதலாக மத்திய அரசு பணத்தை அள்ளித் தந்தது உண்மையா? அல்லது நிதியே தரவில்லை என்பது உண்மையா? ஜெயலலிதாவின் இரண்டு முகங்களில் எந்த முகத்தை நாம் நம்புவது? என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications