கரூரில் சூதாட்டம்: 12 பேர் கைது, ரூ.1.52 லட்சம் பறிமுதல்
கரூர்: கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கந்தப் பொடிக்காரத் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக கரூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கரூர் டவுன் டி.எஸ்.பி. மனோகரன், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் முகேஷ் மற்றும் போலீசார் அந்த வீட்டை இரவு முதல் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வீட்டு பலர் வந்து போவது தெரிய வந்தது. திடீரென அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சாதிக் (35) உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.52 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கைதான 12 பேரையும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications