கர்நாடகாவில் பெண்கள் முன் நிர்வாண போஸ் கொடுத்த விவசாயிக்கு தர்ம அடி
பெங்களூர்: கர்நாடகாவில் பெண்கள் முன் நிர்வாணமாக நடமாடி வந்த நபரை பிடித்து பொதுமக்கள், மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள திம்மாபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டேஷ் (45). விவசாயி. அப்பகுதியில் உள்ள சாலையில் கோட்டேஷ் நடந்து செல்லும் போது எதிரே பெண்கள், கல்லூரி மாணவிகள் யாராவது வந்தால் உடனே தனது ஆடைகள் முழுவதையும் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுப்பது வழக்கம்.
இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பெண்கள் இவரது கண்ணில் படாமல் தப்பியோடி விடுவர். இந்த நிலையில் சம்பவத்தன்று கோட்டேஷ் சாலையில் நடந்து சென்ற போது எதிரே ஒரு பெண் வந்துள்ளனர். இதனை கண்ட கோட்டேஷ் வழக்கம் போல தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார்.
இதனை கண்டு கொள்ளாமல் அந்த பெண் நடந்து சென்றார். அதனால் ஏமாற்றமடைந்த கோட்டேஷ், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுந்து சில்மிஷம் செய்ய முயன்றார். உடனே பயந்துபோன அந்த பெண் கூச்சலிட ஆரம்பித்தார்.
அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் கோட்டேஷை பிடித்து அடித்து உதைத்தனர். அதிலும் ஆத்திரம் அடங்காத மக்கள், கோட்டேஷை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு தூக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் அவரை கட்டி வைத்து மீண்டும் அடித்து உதைத்தனர்.
இதில் படுகாயமடைந்த கோட்டேஷை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். பின்னர் கோட்டேஷை மக்களிடம் இருந்து மீட்டு, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications