இன்னும் 5 ஆண்டுகளில் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: நாராயணசாமி
டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 10 புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவி்த்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கூடங்குளம் விவகாரம் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது கூங்குளம் அணுமின் நிலையத்தி்ற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து உறுப்பினர்கள் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,
தற்போது இந்தியாவில் 19 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் நாட்டிற்கு 4,650 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளம் உள்பட 7 இடங்களில் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருதிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் அந்த 7 அணுமின் நிலையங்களில் 5,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12வது ஐந்தாண்டு திட்ட காலமான 2012-17ம் ஆண்டுகளில் மேலும் 10 புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த திட்ட காலத்திற்கு முன்பாக அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் இல்லை என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மக்கள் நடத்தும் போராட்டம் இன்று 100வது நாளைத் தொட்டுள்ளது. இந்நிலையில் நாராயணசாமியின் அறிவிப்பு மக்கள் என்னதான் போராட்டம் நடத்தினாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மத்திய அரசு மூடாது என்பது போல் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications