சேலத்தில் கணித ஆசிரியயை கொல்ல முயன்ற உதவி தலைமை ஆசிரியர் கைது
சேலம்: சேலத்தில் கணித ஆசிரியரை கொலை செய்ய திட்டமிட்ட உதவி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் முள்ளுவாடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. இவருக்கும் அதே பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சசிகலா என்பவருக்கும் இடையே பணி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர் அப்துல் ஜபார் என்பவர், சேலம் நகர காவல்நிலையத்தில் சனிக்கிழமையன்று புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், ஆசிரியை சசிகலாவை மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யும்படி உதவி ஆசிரியர் தமிழ்மணி தம்மை மிரட்டுவதாக கூறியிருந்தார். கொலை செய்வதற்காக 2 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதாகவும் மாணவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியை சசிகலாவை கொலை செய்ய தமிழ்மணி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆசிரியர் தமிழ்மணியை கைது செய்த போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications