பழங்குடி பெண்களை கற்பழித்த 4 போலீசாரை கைது செய்ய மாதர் சங்கம் கோரிக்கை
விழுப்புரம்: திருக்கோவிலூரில் பழங்குடி பெண்களை கற்பழித்த போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் என்.அமிர்தம், மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் 4 பேர் போலீசாரால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.
இந்த விவாகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டு்ம்.
வாச்சாத்தியில் மலைவாழ் மக்கள் மீது வனத்துறையினர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் நடத்திய மனித தன்மையற்ற தாக்குதல் - கற்பழிப்பு கொடூரங்களுக்கு எதிராக சமீபத்தில் தீர்ப்பு வெளியான நிலையிலும் கூட தமிழகத்தில் மீண்டும் போலீசார் இது போன்ற கொடிய செயலில் ஈடுபட்டுள்ளது வேதனை அளிக்கின்றது.
எனவே இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என்று அந்த அறிக்கையில் தெரிவித்தள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications