சென்னை பஸ் ஸ்டாண்ட் பார்மஸியில் குழந்தை பெற்றெடுத்த மதுரைப் பெண்!
சென்னை: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு, மதுரைக்குப் போவதற்காக கணவருடன் வந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பஸ் நிலையத்திலேயே பிரசவ வலி ஏற்படவே, பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதவியுடன் அங்கிருந்து மருத்துக் கடையில் சுகப் பிரசவம் நடந்தது. அழகான ஆண்குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.
மதுரையைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி. இவர் தனது கணவர் ரமேஷுடன் சென்னை வட பழனியில் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த பாண்டீஸ்வரியை மதுரையில் உள்ள தாய் வீட்டில் பிரசவத்துக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்தார் ரமேஷ். இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இருவரும் வந்தனர்.
பஸ் நிலையத்தில் பாண்டீஸ்வரியை அமர வைத்து விட்டு மருந்து வாங்குவதற்காக போனார் ரமேஷ். இந்த நேரம் பார்த்து பாண்டீஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரைப் பார்த்த அங்கிருந்த பெண் சப் இன்ஸ்பெகட்ர் ரபி தேவி என்பவர் உடனடியாக அருகில் இருந்த பெண்களின் உதவியுடன் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அப்பல்லோ பார்மஸி மருந்துக் கடைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு பாண்டீஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நிறை மாத கர்ப்பிணிக்கு பார்மஸியில் குழந்தை பிறந்த செய்தி பரவியதும் பஸ் ஸ்டாண்ட்டில் இனியஅதிர்ச்சி பரவியது. பலரும் அங்கு கூடி விட்டனர். பின்னர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பாண்டீஸ்வரியை அவரது கணவருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications