அன்னாவை 'அமுக்கிய' சில்லறை வணிகம்!; இத.. இதைத் தான் மத்திய அரசும் எதிர்பார்த்தது!!

இந்த விவகாரம் காரணமாக கடந்த 3 நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நாடாளுமன்றம் இயங்கவில்லை.
இதில் ஒருமித்த கருத்தை எட்டி நாடாளுமன்றத்தை அமைதியாக இயங்கச் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. ஆனால், இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்க, அதை ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளான திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை கூறிவிட்டன.
இந் நிலையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் திமுக தனது நிலையை தெளிவுபடுத்தியது. அதே போல பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் அன்னிய முதலீட்டை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
இதனால் இக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏதும் எட்டப்படவில்லை. எந்த முடிவையும் எடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது.
என்ன ஆனாலும் சரி, அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு அறிவிக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என எதிர்க் கட்சிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன.
லோக்பால், கருப்புப் பண விவகாரம் ஆகிய பிரச்சனைகளை மையமாக வைத்தே கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரச்சனை கிளப்பப்பட்டது. இதில் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோருக்கு பெரும் முக்கியத்துவமும் கிடைத்தது.
இந்தக் கூட்டத் தொடரிலும் அன்னா, ராம்தேவ் ஆகியோர் முக்கியத்துவமும் விளம்பரமும் கிடைத்துவிடக் கூடாது என்று திட்டமிட்ட மத்திய அரசு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற குண்டைத் தூக்கிப் போட்டு லோக்பால், கருப்புப் பண விவகாரத்தை அப்படியே அமுக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அன்னா.. ராம்தேவ் என்று கூப்பாடு போட்டு வந்த மீடியாக்கள் இப்போது சில்லறை வணிகம், அன்னிய முதலீடு, வால் மார்ட் என்று திசை மாறிவிட்டன. இதைத் தான் மத்திய அரசும் எதிர்பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications