தட்டாம்பூச்சி சைஸில் உளவு விமானங்கள் தயாரிக்கப்படும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேட்டி
சென்னை: எதிரிகளை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் பறவைகள், தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம் தயாரிக்கப்படவிருப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முதன்மை கட்டுப்பட்டாளர் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவதாணுப்பிள்ளை கூறியதாவது,
வருங்கால மக்களின் வாழ்க்கையில் நானோ டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கும். நானோ டெக்னாலஜி மூலம் உணவு பதப்படுத்துதல், எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பான குடிநீர் உள்ளி்ட்ட துறைகளில் மக்கள் பயன் பெற முடியும்.
ஒளியை விட 7 மடங்கு வேகமாக சென்று தாக்கக் கூடிய பிரமாஸ் ஏவுகணையின் வேகத்தை மேலும் அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. உயர்வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் ஏவப்பட்டால் அவை மனித உடலில் படும் போது அவர்களுக்கு கதிர்வீச்சு ஏற்படும். அந்த கதிர்வீச்சு பாதிப்பை குறைக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் கொடுக்க வேண்டும்.
இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி. ஆகியவற்றை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட சீருடை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் உடல்நிலையை ராணுவ அதிகாரிகள் முகாமில் இருந்தவாறே தெரிந்து கொள்ள முடியும். ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிக்கவும் இந்த சீருடை பயன்படும்.
நானோ டெக்னாலஜியின் மூலம் தட்டாம்பூச்சி, பறவைகளின் அளவில் உளவு விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் வெளிநாட்டு எதிரிகளின் ஊடுருவல், நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானங்களில் 5 ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications