சென்னையில் பெட்ரோல் விலை 83 பைசா குறைப்பு: 2 வாரங்களில் 2வது விலை குறைப்பு

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் மறுபடியும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முத்ல அமலுக்கு வந்தது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 பைசா குறைந்து ரூ.69.55க்கு விற்கப்படுகிறது.
புதிய விலை: (1 லிட்டர் பெட்ரோல்)
| நகரம் | பழைய விலை | புதிய விலை |
| பெங்களூர் | 74.36 | 73.51 |
| தில்லி | 66.42 | 65.64 |
| மும்பை | 71.47 | 70.65 |
| கொல்கத்தா | 70.84 | 70.02 |
கடந்த மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.22 குறைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் கடந்த மாதம் தான் முதன்முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. முன்னதாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு குறைந்ததால் நவம்பர் 4ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தின.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications