குடும்ப தகராறில் 2 வயது குழந்தையை கொன்று தந்தை தற்கொலை
சங்கரன்கோவில்: சங்கரன் கோவிலில் குடும்பத் தகராறு காரணமாக 2 வயது பெண்குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 3ம் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி முத்தம்மாள் என்ற மனைவியும், ஆதித்யா என்ற 2 வயது குழந்தையும் உள்ளது.
மாரிமுத்துவுக்கு குடிபழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இரு தினங்களுக்கு முன் மாரிமுத்து வழக்கம்போல் குடித்து விட்டு வந்தாராம். இதை முத்தம்மாள் தட்டி கேட்டார். இதில் அவர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் முத்தம்மாள் குழந்தையை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
விஷம் கொடுத்து கொலை
வீட்டில் தனிமையில் இருந்த மாரிமுத்து மனவேதனை அடைந்தார். இதையடுத்து இரவு மாமியார் வீட்டுக்கு சென்று தனது குழந்தை ஆதித்யாவை அழைத்து வந்தார். பின்னர் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டு படுத்துவிட்டார்.
புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் மாரிமுத்துவின் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர். அங்கு மாரிமுத்துவும், ஆதித்யாவும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications