100 ஆண்டு பழமையான ஆணைகள் குறித்து விரிவான ஆய்வு தேவை- உம்மன் சாண்டி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் உம்மன் சாண்டி. பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டது. இனியும் அது நீடித்தால் அது கேரள மக்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்காது என்பதை பிரதமரிடம் தெரிவித்தேன்.
முல்லைப் பெரியாறு போன்ற 100 ஆண்டு பழமையான அணைகள் குறித்து விரிவான ஆய்வு தேவை. கேரளத்துக்குப் பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் என்பதுதான் எங்களது நிலை.
புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு ஒரு சொட்டு கூட குறையாது. இப்போது போலவே தமிழகத்திற்குத் தண்ணீர் தருவோம்.
இந்தப் பிரச்சினையால் தமிழகத்துடனான நல்லுறவு பாதிக்கப்படாது. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications