நான் செத்தால் மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்துபோனதாய் சொல்வார்கள்! - ஹஸாரே

பாராளுமன்றத்தின் தற்போதைய குளிர் காலக் கூட்டத் தொடரில் வலுவான லோக்பால் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். ஆனால் அவர் கூறிய அம்சங்களை லோக்பால் மசோதாவில் மத்திய அரசு சேர்க்கவில்லை.
குறிப்பாக லோக்பால் வரையறைக்குள் கடைநிலை ஊழியர்களையும் கொண்டு வரவேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்பட வில்லை. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை கண்டித்து அன்னாஹசாரே வரும் 27-ந் தேதி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், உபி உள்ளிட்ட மாநில தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு இதுகுறித்து பேட்டியளித்தார் ஹஸாரே. அவர் கூறுகையில், "லோக்பால் மசோதா விஷயத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்ள வில்லை. எங்களிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மதிக்கப்படவில்லை. இது நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
லோக்பால் விசாரணை வரம்புக்குள் கடைநிலை ஊழியர்களையும் சேர்க்க முதலில் மத்திய அரசு சம்மதித்தது. இப்போது காங்கிரசார் பல்டி அடித்து விட்டனர். அவர்களுக்கு லோக்பால் மசோதா கொண்டு வர விருப்பம் இல்லை. எனவே தான் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் மூலம் லோக்பால் மசோதாவை கிடப்பில் போடும் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடு பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி தடுக்கிறார்
மத்திய அரசிடம் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. எந்த ஒரு முடிவும் உரிய நேரத்தில் எடுக்கப்படுவதில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் கடை நிலை ஊழியர்களை சேர்க்கலாம் என்று நிலைக்குழு கூறி இருந்தது. ஆனால் திடீரென மத்திய அரசு பின்வாங்கி விட்டது. ராகுல்காந்தி தான் போன் செய்து லோக்பால் வரம்புக்குள் கடைநிலை ஊழியர்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறி இருப்பார் என்று நினைக்கிறேன்.
லோக்பால் வரம்புக்குள் கடைநிலை ஊழியர்களும் சேர்க்கப்படாவிட்டால், ராகுல்காந்திக்கு நாட்டு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். மன்மோகன் சிங் இரட்டை வேடம் போடுகிறார். அவரது செயல்கள் துரோகம் செய்வது போல உள்ளன.
லோக்பால் அமைப்பு சுயாட்சி கொண்ட ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இன்று சி.பி.ஐ. அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. சி.பி. ஐ.யை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால் அதற்கு இந்த அரசுதான் பொறுப்பு. அப்படியே நான் செத்துப் போனாலும், மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் செத்துப் போனான் என்றுதான் மக்கள் பேசுவார்கள்," என்றார் ஹஸாரே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications