ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

vijayakanth and Rosaiah
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து மனு கொடுத்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட தென் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டப் போவதாக கேரளா மிரட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை உருவாகியுள்ளது.

கேரளாவின் அரசியலுக்கு இரு மாநில மக்களும் பலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அவருடன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 28 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் காரில் சென்றனர்.

ஆளுநர் மாளிகையில் விஜயகாந்த்தும், எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து பெரியாறு அணை தொடர்பாக மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது. ஆனால் அணை பலவீனமாக இருப்பதாக கூறி புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்கிறது.

கேரளாவின் நடவடிக்கையால் இரு மாநிலங்களிடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும். எனவே புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு அணை பற்றி கேரளா வீண்வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்," என்று கேட்டுக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+