சென்னை மாநகராட்சி 35வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஞானசேகரன் மரணம்

சென்னை மாநகராட்சியின் 35வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஞானசேகரன்(65). கொடுங்கையூரில் உள்ள டாக்டர் அம்பேத்கார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த மாதம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உடல் நிலை தேறியதையடுத்து வீடு திரும்பினார்.
கடந்த 3ம் தேதி அவரது உடல் நிலை மோசமானதையடுத்து உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகி்ச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற போராடியும் பலனில்லாமல் அவர் மரணம் அடைந்தார்.
காலமான ஞானசேகரனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும், ராஜா, இளங்கோவன், டேவிட் என்ற 3 மகன்களும், ஸ்டெல்லா, மனோ என்ற 2 மகள்களும் உள்ளனர். அவரது உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொடுங்கையூர் கல்லறை தோட்டத்தில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications