முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றன-ஜெ.
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. எனவே இந்தப் பிரச்சினை தொடர்பாக சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரளாவில் அரசியல் கட்சியினர் நடத்தி வரும் வன்முறைச் செயல்களால், தமிழக-கேரள எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எனவே பாதுகாப்புக்காகவும், பதட்டத்தைத் தணிக்கவுமே அங்கு கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இருப்பினும் இதுவரை பிரதமரிடமிருந்து இதுதொடர்பாக பதில் ஏதும் இல்லை. பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications