முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்: சுப்பிரமணியசாமி கோரிக்கை
மதுரை: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிராக எந்த தடை உத்தரவும் இல்லை. ஆனால் இது தொடர்பாக அதிமுக, திமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள தீய சக்திகள் பிரச்சனையை கிளப்பி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். எனவே உடனடியாக பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நல்ல முறையில் செல்கிறது. குற்றவாளியான கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததை விடுதலையே கிடைத்தது போன்று திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அடுத்த விசாரணையின் போது கனிமொழியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
2 ஜி ஸ்பெக்ட்ராம் வழக்கில் ராசா மீது குற்ற்ச்சாட்டு உள்ளது போல மத்திய அமைச்சர் சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டுள்ளது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications