சபரிமலையில் உயிரிழந்த விழுப்புரம் மூதாட்டி- கொண்டு வர முடியாமல் குமுளியில் காத்திருக்கும் உடல்
குமுளி: விழுப்புரத்தைச் சேர்ந்த 65 வயதுப் பெண்மணி சபரிமலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் குமுளி கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகத்திற்கு வர ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்து விட்டதால் உடல் அழுகும் நிலைக்குச் சென்று கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் லீலா. 65 வயதான இவர் சபரிமலைக்கு சென்றிருந்தார். சன்னிதானத்திற்கு பாதயாத்திரையாகப் போனபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஐயப்ப சேவா சங்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி குமுளி வழியாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமுளியோடு டிரைவர் நின்று விட்டார். தமிழகத்தில் அசாதாரண நிலை நிலவவதால் அதற்கு மேல் போக ஆம்புலன்ஸ் டிரைவர் முன்வரவில்லை.
இதனால் உடல் குமுளியிலேயே நடுச் சாலையில் ஆம்புலன்ஸில் காத்திருக்கிறது. அந்த ஆம்புலன்ஸில் ப்ரீசர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால் உடல் அழுகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்திலிருந்து ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் உடலை அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருப்பதாக கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications