For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவைக் கண்டித்து தேனியில் வைகோ உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

Vaiko
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளின் அரசின் போக்கைக் கண்டித்து தேனியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து நேற்று மதுரையிலிருந்து விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கினார் வைகோ. இந்தப் பிரசாரம் முதலில் கூடலூரில் முடிவடைதாகவும், பின்னர் கம்பத்தில் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போது நிலவும் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு வைகோவின் போராட்டம் தேனிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலை வைகோ தனது உண்ணாவிரதத்தை தேனியில் தொடங்கினார்.

அவருடன் கொளத்தூர் மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைகிறது. பழ. நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்.

English summary
MDMK chief Vaiko has launched one day fast in Theni today. Kolathur Mani and hundreds are participating the protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X