ஆபாச எஸ்.எம்.எஸ். விவகாரம்: குற்றவாளியை கைது செய்யக் கோரி பரமத்தி காவல் நிலையம் முற்றுகை
நாமக்கல்: பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய குற்றவாளியை கைது செய்யக் கோரி பரமத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ளது கோனூர். இந்த பகுதியைச் சேரந்தவர் ராஜா. இவரது நபண்பர் புகழேந்திரன். இவர் சங்ககிரியில் பி.டி.ஓ.வாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார்கள் பரமத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் பெண்களுக்கு ஆபாச எஸ்.எ.ம்.எஸ். அனுப்பிய ராஜாவை மட்டும் போலீசார் உடனே கைது செய்தனர். ஆனால் பி.டி.ஓ. புகழேந்திரன் கைது செய்யப்படவில்லை.
இதனால் புகழேந்திரனை கைது செய்யக் கோரி 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரமத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications