தமிழக, கேரளா எல்லையில் பதற்றம்: கம்பம்மெட்டில் விவசாயிகள் மீது போலீஸ் திடீர் தடியடி!

தமிழக கேரள எல்லையில் பதற்றம்
முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் தமிழக – கேரளா எல்லையில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணையை நோக்கி பேரணி
இதனிடையை கடந்த சனிக்கிழமையன்று தேனி மாவட்ட விவசாயிகள் திடீரென கேரள எல்லையை நோக்கி பேரணியாக சென்று முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனையடுத்து அவர்களை கேரள எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் வீட்டிற்கு திரும்பி செல்ல வலியுறுத்தினர். ஞாயிற்றுக்கிழமையன்றும் லட்சக்கணக்கான விவசாயிகள் கேரளா எல்லையை நோக்கி படையெடுத்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று அஞ்சிய போலீசார் அவர்களை எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கேட்டுக்கொண்டும் அவர்கள் பின்வாங்காமல் அணையை நோக்கி முன்னேறினர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது.
மூன்றாவது நாளாக ஊர்வலம்
இந்த நிலையில் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, குச்சனூர், சடையனூர், மார்க்கேயன் கோட்டை, உ.அய்யம்பட்டி உள்பட 25 கிராம மக்கள் திரண்டு கூடலூர் சென்றனர். பின்னர் அவர்கள் டிராக்டர், வேன், லாரிகளில் குமுளியை நோக்கி புறப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் கையில் தடி, இரும்பு கம்புகளுடன் இருசக்கர வாகனங்களில் சென்றனர். மூன்றாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர் நேரம் செல்ல செல்ல மேலும் சில கிராம குவிந்த வண்ணம் உள்ளதால் தமிழக எல்லை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு 5 அடுக்குப் பதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரத்திற்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
கம்பம் மெட்டில் தடியடி
இதனிடையே குமுளி வழியாக செல்ல தடை உள்ளதால் கம்பம் மெட்டு வழியாக 20 ஆயிரம்திற்கும் மேற்பட்டோர் கேரளாவிற்கு செல்ல முயன்றனர். அப்பகுதியில் 144 தடியடி உள்ளதை சுட்டிக்காட்டிய போலீசார் மக்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு காவல்துறை வாகனங்களை அடித்து உடைத்தனர். இதனையடுத்து போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கம்பம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி உத்தமபாளையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. பின்னர் கடுமையான சோதனைக்குபின்னரே கம்பம் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications