சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் மனு நிராகரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் நான்கு நாட்கள் ஆஜராகி, நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதனையடுத்து இரண்டாவது குற்றவாளியான சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தனக்கு ஆங்கிலம் தெரியாததால், இந்த வழக்கில் தமிழில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யக்கோரி சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவின் மனுவை நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கர்நாடக நீதிமன்றங்களில் ஆங்கிலம், கன்னடம் மட்டுமே வழக்கு மொழியாக இருப்பதால் தமிழில் வாக்குமூலம் பெற இயலாது என்று நீதிபதி கூறிவிட்டார்.
இதை எதிர்த்து அப்பீல் செய்ய 3 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரி சசிகலா இன்னொரு மனு தாக்கல் செய்தார். ஆனால், அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications