வந்தவாசியில் மினிவேன்- கரும்பு லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
வந்தவாசி: வந்தவாசி அருகே மினி வேன், கரும்பு லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. ஏந்தல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள இவருக்கு, சேத்துப்பட்டை அடுத்த பழம்பேட்டையில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக 25க்கும் மேற்பட்டோர் அடங்கிய திருமண குழு, மினி வேனில் பழம்பேட்டைக்கு நேற்று மாலையில் புறப்பட்டு சென்றனர். ஏந்தல் கூட்ரோடு அருகே சென்றபோது, சேத்துப்பட்டில் இருந்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நோக்கி சென்ற கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி மினி லாரியின் மீது மோதியது. இதில் மினி வேன் நொறுங்கி, பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் ஏந்தலை சேர்ந்த பூங்காவனம்(50), பிச்சாண்டி(45), வடிவேல்(50), லலிதா(45) உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த 20 பேர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து வடவணக்கம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications