கூடங்குளம் அணு உலை குறித்துப் பயம் தேவையில்லை- மத்திய குழு தலைவர் பேட்டி

கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் படத் தொடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவ கிராம மக்களின் அச்சம். எனவே அணு மின் நிலையத்தை நிரந்தமாக மூட வலியுறுத்தி மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கடந்த நான்கு மாதங்களாக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தை
அணு மின் நிலையம் தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சத்தை போக்க மத்திய அரசு 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இது போராட்டக்குழுவினருடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று நெல்லையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குபின்னர் இக்குழுவின் தலைவர் முத்துநாயகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அணுமின் நிலையம் தொடர்பான அச்சத்தை போக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை விளக்க வேண்டும் என்பதுதான் மத்திய குழுவின் பணி. அதற்காக நாங்கள் 77 பக்க அறிக்கையை தயாரித்து மாநில குழுவிடம் வழங்கியுள்ளோம்.
பயம் தேவையில்லை
உலகமே அணுசக்திக்கு மாறி வருகிறது. 60 ஆண்டுகளாக அணுசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1979ல் அமெரிக்காவிலும், 1986ல் செர்னோபிலும், 2011ல் ஜப்பானிலும் மூன்று அணு உலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த அணு உலைகளில் நடந்தது விபத்துகள். எதனால் விபத்து நடந்தது என்பதையும் ஆராய்ந்து ஆய்வு செய்த பின்னரே கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானது என்கிறோம்.
கூடங்குளம் அணு உலைக்கான தொழில் நுட்பத்தில் ரஷ்யாவில் 20 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அதை விட கூடுதலான சர்வதேச பாதுகாப்பு அம்சங்களுடன் தான் கூடங்குளத்தில் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு உலைகள் வெடித்து விடும் என்ற பயம் தேவையில்லை. கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது, சுனாமி வந்தாலும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
அணு உலைகளை குளிர்விக்க கடல் தண்ணீர் தான் எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மீண்டும் கடலுக்குள் செல்வதால் கடல் நீர் சூடாகி விடும் என்கின்றனர். உலகில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. கடல் நீரின் மேற்பரப்பு மட்டுமே குளிராக இருக்கும். கீழே செல்ல செல்ல வெது வெதுப்பாக தான் இருக்கும். அணு மின் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மட்டுமே நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications