மரண தண்டனைக்கு எதிரானவரா? 92822-21212 எனற எண்ணில் மிஸ்டு கால் கொடுங்கள்!
சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காப்பாற்ற மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மரண தண்டனைக்கு எதிராக செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நூதன பிரச்சாரத்தை தமிழ் திரைப்படத்துறையினர் துவக்கி வைத்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரைக் காப்பாற்றவும், தூக்கு தண்டனைக்கு எதிரான மக்கள் கருத்துகளை ஒருங்கிணைக்கவும் மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து எதிர்ப்பை தெரிவிக்கும் நூதன பிரச்சாரத்தை தமிழ் திரைப்படத்துறையினர் துவக்கி வைத்தனர்.
இது குறித்து நடிகர் சத்யராஜ், கவிஞர் தாமரை, இயக்குனர்கள் வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய நிரபராதித் தமிழர்களைக் காப்பாற்ற பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் சேர்ந்து மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு கட்டமாக அந்த 3 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மக்களின் கருத்துகளை ஒருங்கிணைக்கும் பணி துவங்கியுள்ளது. மரண தண்டனைக்கு எதிரானவர்கள், தூக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்ற விரும்புகிறவர்கள் 92822-21212 எனற செல்போன் எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள். மிஸ்டு கால் கொடுத்ததும் இணைப்பு கட் ஆகும் வகையிலும், ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஒரு முறை மட்டுமே மிஸ்டு கால் பதிவாகும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் மிஸ்டு கால்கள் வந்தால் மரண தண்டனைக்கு எதிரான குரல்களின் வலிமையை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கலாம்.
மானுடம் மற்றும் நீதியின் மேல் அக்கறை உள்ளவர்கள் மேற்கண்ட எண்ணில் ஒரு மிஸ்டு கால் கொடுத்து மரண தண்டனைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்கள்.
இந்த பேட்டியின்போது இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, கவுதமன், சமுத்திரகனி, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு ஆகியோர் உடனிருந்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications