பத்மனாபுரத்தில் தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை கல்வீசி தாக்கிய மலையாளிகள்
புனலூர்: கேரள மாநிலம் பத்மநாபபுரம் அருகே தமிழ்நாட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனங்களை மலையாளிகள் சிலர் கல்வீசி தாக்கியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின.
தமிழகத்திலிருந்து செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வாகனங்களும், அத்தியவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களும் கேரளாவுக்கு செல்கின்றன.
இந்நிலையில் தேனி, சென்னை, சேலம் பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமையன்று பத்மனாபுரம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் பேருந்தின் முன்பகுதியை கல்வீசி தாக்கியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. கல்வீசிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள போலீசில் புகார் செய்துள்ளனர். இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இன்று காலை முதலே சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்களின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகம் நோக்கி திரும்பிய வண்ணம் உள்ளன. புளியரை பகுதியில் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தென்மலை பகுதியில் தமிழக பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications