For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பைக்கில் சென்ற அதிமுக எம்.எல்.ஏ. வாலாஜா பா.கணேசன் இன்னொரு பைக் மோதி படுகாயம்

By Siva
Google Oneindia Tamil News

காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தை அடுத்து உள்ள வாலாஜாபாத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அதிமுக எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன். அவர் காஞ்சீபுரத்தை அடுத்து உள்ள வாலாஜாபாத்தில் வசித்து வருகிறார். நேற்று காலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அதே பகுதியில் உள்ள ராஜவீதியில் திரும்பும்போது அவர் மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனால் கீழே விழுந்த கணேசனுக்கு முகம், கைவிரல், காலில் படுகாயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கேள்விப்பட்ட காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றியக் குழு தலைவர்கள் வரதராஜுலு, ஜீவாநந்தம், காஞ்சீபுரம் நகராட்சி தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, பேரூராட்சி தலைவர் அக்ரி. நாகராஜன் உள்பட பலர் மருத்துவமனைக்கு சென்று கணேசனை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
ADMK MLA Walajabad Ganesan has met with an accident as a 2 wheeler hit his bike in which he is seriously injured. He is admitted in a private hospital in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X