கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளை மூட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
சென்னை: கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை மத்திய அரசு மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையம் இரண்டு வாரங்களில் இயங்கத் தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும், போராட்டக்காரர்கள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் எனக் கூறியிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகளைத் தொடங்கக்கூடாது என்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் மதித்ததாகத் தெரியவில்லை. பிரதமரின் பேச்சுகள் கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.
எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதேபோல கல்பாக்கம் அணுமின் நிலையத்தையும் 2020ம் ஆண்டுக்குள் மூடுவதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications