சபரிமலை கோவிலுக்குள் நுழைய தந்திரி பேரனுக்கு அனுமதி மறுப்பு: கேரளா ஐகோர்ட் அதிரடி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய தந்திரியின் மகள் வழிப் பேரனுக்கு அனுமதி மறுத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரியாக இருப்பவர் கண்டரரு மகேஷ்வரரு. கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேஷ்வரரு தனது மகள் வழிப் பேரன் நரேஷ் ஈஸ்வரை கோவில் சன்னிதானத்திற்குள் அழைத்து சென்றார். அதைப் பார்த்த தேவசம் போர்டு அதிகாரிகள் நரேஷை உள்ளேவிட மறுத்துவிட்டனர்.
இதனால் கண்டரரு மகேஷ்வரருக்கும் தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபரிமலையில் மகள் வழிப்பேரனை அனுமதிப்பது இல்லை என்ற மரபு இருக்கையில் அதை மீறயதற்காக மகேஷ்வரரு மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தேவசம் போர்டு அறிவித்தது.
இதற்கிடையே தன்னை அனுமதிக்காத தேவசம் போர்டு அதிகாரிகள் மீது கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும், சன்னிதானத்திற்குள் நிச்சயமாக நுழையப் போவதாகவும் நரேஷ் ஈஸ்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தந்திரி இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
எனக்கு வயதாகிவிட்டது. அதனால் தான் பேரன் நரேஷ் ஈஸ்வரை எனக்கு உதவியாக சன்னிதானத்திற்குள் அழைத்துச் சென்றேன். ஆனால் தேவசம் போர்டு அதிகாரிகள் எனது பேரனுக்கு அனுமதி மறு்ததுவிட்டனர். எனவே, எனது பேரனை சன்னிதானத்திற்குள் அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
சபரிமலை தந்திரி தனக்கு யார் உதவி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தேவசம் போர்டு நிர்வாகத்திடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். சபரிமலையில் மகள் வழிப் பேரன்களை பூஜையில் அனுமதிப்பதில்லை என்பது மரபாக இருந்தும் அதை தந்திரி மீறி இருப்பது சரியல்ல. தேவசம் போர்டு அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். தந்திரியின் மகள் வழிப் பேரன் நரேஷ் ஈஸ்வர் சபரிமலை கோவிலுக்குள் நுழைய எக்காரணம் கொண்டும் அனுமதி கிடையாது என்று அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
ஏற்கனவே மகேஷ்வரரு தனது மகன் மோகனரரு கண்டரருவை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விபச்சார வழக்கில் சிக்கிய மோகனரரு தந்திரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் மோகனரருவுக்கு கோவிலுக்குள் நுழைய நீதிமன்றம் அனுமதி மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications