மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு கட்டணம் ரூ.115
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்களில் அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இருந்ததால் அப்பாடப்பிரிவை எடுத்து படித்த மாணவர்களிடம் ரூ.225 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் நடப்பாண்டில் அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வு எழுதவிருக்கின்றனர். இதனால் பிற மாணவர்களைப் போன்று
மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் தேர்வுக் கட்டணத்தை அரசு ஏற்கிறது. தனியார் பள்ளிகளில் பயில்வோர், ஆங்கில வழியில் பயில்வோர் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவ-மாணவியர் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகாமானோர் 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குனர் பரிந்துரைத்திருந்தார். அவரது பரிந்துரையை ஏற்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் பிறப்பித்துள்ள அரசாணை விவரம் வருமாறு,
பத்தாம் வகுப்புத் தேர்வுக் கட்டணமாக பள்ளித் தேர்வர்களிடமிருந்து ரூ.115ம், மெட்ரிக் பள்ளித் தேர்வர்களுக்கு அறிவியல் 1 மற்றும் 2-க்கு செய்முறைத் தேர்வு இருந்ததால் ரூ.225ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
வரும் 2012 மார்ச்சில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வுக் கட்டணத்தில் எந்தவித உயர்வும் கூடாது என்று அரசு கருதியுள்ளது.
எனவே மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கட்டணமாக ரூ.115ஐ நிர்ணயம் செய்து வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கோரியுள்ளார். அதையேற்று மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.115 நிர்ணயம் செய்யப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications