சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகரில் உள்ள ராமச்சந்திரன் வீடு, தியேட்டர், நூற்புமில், ஜவுளிக்கடை, மகள், மகன் வீடுகள், மைத்துனரின் வீடு உள்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள மகன், மகள், மருமகன் வீடுகளிலிலும் ரெய்டு நடந்து வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்தூர் ராமச்சந்திரன் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
சட்டப்படி எதிர்கொள்வோம்
லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமச்சந்திரன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். அரசு ஆட்டுவிக்கிறது. அதற்கேற்ப அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். இதற்கு அதிகாரிகளை குறை சொல்ல முடியாது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் தலைவர் கலைஞர் தலைமையில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications