சாக்கடையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து 4 பேர் காயம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாக்கடையில் கிடந்த மர்ம பொருள் ஒன்று வெடித்து துப்புரவு தொழிலாளர்கள் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடைகளை சீரமைக்கும் பணி இன்று காலை நடந்தது. இந்த பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர்.
சாக்கடைக்குள் உள்ள கழிவுகளை தொழிலாளர்கள் அள்ளி அதனை வெளியே எடுத்து போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாக்கடைக்குள் மர்ம பொருள் ஓன்று கிடந்தது. அதனை தொழிலாளர்கள் எடுத்த போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் சாக்கடை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தூத்துக்குடி டிஎம்சி காலனியை சேர்ந்த காளிதாஸ், முகுந்தன், மேல அரசடியை சேர்ந்த சூரியா, அம்பையை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களது முகம் சிதைந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெடித்து சிதறி கிடந்த மர்ம பொருளின் துகள்களை போலீசார் சேகரித்தனர். அதை வைத்து வெடித்த மர்ம பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications