சசிகலா அண்ணி இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் அதிமுகவிலிருந்து நீக்கம்

சமீபத்தில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை அதிரடியாக கட்சியை விட்டுத் தூக்கினார் ஜெயலலிதா. சசிகலா, நடராஜன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இருப்பினும் சசிகலாவின் அண்ணி இளவரசி, அவரது சம்பந்தி கலியபெருமாள் மற்றும் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா ஆகியோர் மட்டும் நீக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது கலியபெருமாளை விரட்டியுள்ளார் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் திருச்சி கலியபெருமாள், பழனிவேல் ஆகியோர் நீக்கப்படுகின்றனர். இவர்களுடன் கட்சி உடன்பிறப்புகள் எந்தவகையான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். இவர் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் நியமனத்தில் முக்கியப் பங்காற்றியவர். சசிகலாவுக்கும், இவருக்கும் ஆகாது என்று கூறப்பட்டு வந்தது. மேலும், இளவரசியும் கூட சசிகலாவுக்கு ஆகாதவர் என்றே கூறப்பட்டு வந்தது.
ஆனாலும் தற்போது கலியபெருமாள் நீக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அவரும் 'கூட்டுக் களவாணி'யாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.
கலியபெருமாளைத் தொடர்ந்து இளவரசியும், அனுராதாவும் கூட தூக்கி எறியப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களையும் கட்சியை விட்டு தூக்கி விட்டால் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் அதிமுகவில் இல்லை என்ற நிலை ஏற்படும்.
நடராஜனின் தம்பி பழனிவேல்
ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ள எம். பழனிவேல் வேறு யாருமில்லை, சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பிதான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications