அரக்கோணம் அருகே 2 மகன்களுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
அரக்கோணம்:அரக்கோணத்தில் 2 மகன்களுடன் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தனியை அடுத்த மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பாபு(32). இவரது மனைவி ராதிகா(28). இவர்களுக்கு ரோசன்(6), நவீன்குமார் என்ற 2 மகன்கள் இருந்தனர்.
நேற்று திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அம்மன் கோவிலுக்கு 2 மகன்களுடன் சென்ற ராதிகா சாமி கும்பிட்டார். அதன்பிறகு அங்கிருந்து பாசஞ்சர் ரயில் மூலமாக வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் ரயில் நிலையம் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ராதிகா 2 மகன்களுடன் நடந்து சென்றார்.
அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்ற ராதிகா 2 மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி இறந்தது குறித்த தகவல் அறிந்த ராதிகாவின் கணவர் பாபு அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து, கதறி அழுதார்.
அதன்பிறகு தனது மனைவி ராதிகா தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும், தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி பலியாகி இருக்கலாம் என்றும், தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாபு போலீசாரிடம் கூறினார்.
பாபுவை சமாதானப்படுத்திய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications