சிறுநீரகக் கோளாறு: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பா மரணம்
Subscribe to Oneindia Tamil

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் முதல்வர் எஸ். பங்காரப்பா சிறுநீரகப் பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய் காரணமாக பெங்களூரில் உள்ள மல்லையா மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 12.40 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அவருக்கு மனைவியும், 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
மரணம் அடையும்போது அவர் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியில் இருந்தார். அவர் காங்கிரஸ், பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications