ராஜ்யசபாவில் லோக்பால் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க சமாஜ்வாடி முடிவு?
டெல்லி: ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க சமாஜ்வாடி கட்சியும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 9 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு கட்சிகளில் சமாஜ்வாடிக்கு 5 எம்.பிக்களும், லாலு கட்சிக்கு 4 எம்.பிக்களும் உள்ளனர். இவர்கள் ஆதரவு காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் லோக்சபாவில் லோக்பால்மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது வெளிநடப்புச் செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இதேபோல 18 எம்.பிக்களை ராஜ்யசபாவில் வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்தால் அரசின் நிலைமை கவலைக்கிடமாகி விடும்.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சமாஜ்வாடி, லாலு கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் ஆதரவு காங்கிரஸுக்கு முக்கியமானதாகும். இவர்கள் ஆதரித்து வாக்களிக்காவிட்டாலும் கூட வெளிநடப்பு செய்தால் கூட காங்கிரஸுக்குப் புண்ணியமாகப் போகும். மாறாக எதிர்த்து வாக்களித்தால் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது பெரும் சிக்கலாகி விடும்.
இருப்பினும் பிரணாப் முகர்ஜியை வைத்து இந்தக் கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications