எங்கள் அன்னா!

Subscribe to Oneindia Tamil

23 வயது இளைஞர்களின் துடிப்புடன், 73 வயது அன்னா ஹஸாரே இந்தியாவைப் புரட்டிப் போட்ட ஆண்டு இது.

மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தி என்ற குக்கிராமத்தை பிரமாதமாக மாற்றியமைத்த பெருமைக்குரிய காந்தியவாதியான அன்னா, அங்கிருந்து புறப்பட்டு வந்து டெல்லியில் ஆடிய ருத்ரதாண்டவத்���ைப் பார்த்து மத்திய அரசு மிரண்டே போனது.

சாமானியராக இருந்து வந்த அன்னாவின் பின்னால் இந்திய இளைஞர்கள் பட்டாளம் திரண்டபோது அனைவருமே ஆச்சரியப்படத்தான் செய்தார்கள். மீடியாக்களின் ஊதல்களும் அன்னாவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

ஊழலுக்கு எதிராக புறப்பட்ட அவர் பின்னால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பட்டாளம் படை���ெடுத்துக் கிளம்பியது.

டெல்லியில் தனது போராட்டக் களத்தை அமைத்த அன்னா அங்கு ஜந்தர் மந்தரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை 3 நாட்கள் நடத்தினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் அவர் மேற்கொண்ட உச்சகட்ட உண்ணாவிரதப் போராட்டம் மத்திய அரசை பெரும் பிரச்சினையில் தள்ளி விட்டது. ஆகஸ்ட் 19ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு திரண்டது. இதனால் மத்திய அரசு சற்றே இறங்கி வர நேரிட்டது.

இருந்தாலும் மத்திய அரசு தனது சித்து விளையாட்டைக் காட்டவும் தயங்கவில்லை. அன்னா கூறிய ஜன்லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள் ஏற்கப்படும் என்று கூறிய மத்திய அரசு கடைசி வரை அதை கண்டு கொள்ளாமல் திராட்டில் விட்டு விட்டு தனது லோக்பால் மசோதாவையே சமீபத்தில் லோக்சபாவில் நிறைவேற்றி அன்னா குழுவினரை அதிர வைத்தது.

இந்த நிலையில் அன்னாவுக்கு எதிர்ப்புகளும் வலுக்கத் தவறவில்லை. படிப்படியாக அவருக்கு மக்கள் செல்வாக்கு குறைந்து போய் மும்பையில் சமீபத்தில் 3 நாள் உண்ணாவிரதமாக இருந்த அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் சொற்ப எண்ணிக்கியைலேயே மக்கள் கூட்டம் வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அன்னா தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 2வது நாளிலேயே நிறுத்தி விட்டு சொந்த ஊருக்குப் போய் விட்டார்.

அன்னா சீறும் பாம்பா அ���்லது சாதாரண பூணையா என்பது போகப்போகத்தான் தெரியும்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+