5 மாநில தேர்தல் முடிந்த பிறகு, மார்ச் 4க்குப் பிறகுதான் பட்ஜெட் தாக்கல் செய்வேன்- பிரணாப்
டெல்லி: 5 மாநிலத் தேர்தல் நடைபெற்று முடியும் வரை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட மாட்டாது. அது முடிந்த பிறகு அதாவது மார்ச் 4ம் தேதிக்குப் பிறகுதான் மத்திய பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட்டும் தாக்கலாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கலாகும். ஆனால் தற்போது ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த பிறகுதான் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியும். எப்போது என்பது இப்போதைக்கு முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் மார்ச் 4ம் தேதிக்குப் பிறகுதான் பட்ஜெட்டை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
ஜனவரி 30ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அதற்குப் பிறகே 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications