தானே புயல் ஏற்படுத்திய சீரழிவு எதிரொலி- கடலூரில் 6ம் தேதி வரை வழக்குகள் ஒத்திவைப்பு
கடலூர்: கடலூரில் தானே புயல் ஏற்படுத்திய சீரழிவுகளால் நகரமே சீரழிந்து போயிருப்பதால் சீரமைப்புப் பணிகள் நடைபெற வசதியாக அனைத்து வழக்குகளும் ஜனவரி 6ம் தேதி வரை அங்குள்ள கோர்ட்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தானே புயலால் கடலூர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. நகரமே சீர்குலைந்து போயுள்ளது. சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அங்குள்ள வக்கீல்கள் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று வருகிற 6ம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்களிலும் வழக்குகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
இருப்பினும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வழக்கமான விடுமுறை நாட்கள் என்பதால் அன்றும் விசாரணை இருக்காது என்று தெரிகிறது. எனவே 9ம்தேதிதான் மீண்டும் வழக்குகள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பிற நீதிமன்றப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications