புயல் பாதிப்பு எதிரொலி- கடலூரில் 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை- விழுப்புரத்தில் இன்று விடுமுறை
கடலூர்: தானே புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து இன்னும் மாவட்டம் மீளாததால் கடலூர் மாவட்டத்தில் 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தானே புயலால் கடலூர் மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரமே இல்லை. ஊரே சிதிலமாகிப் போய்க் கிடக்கிறது.
கடலூர் நகரிலும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மின்விநியோகத்தை சீரமைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் மின்சாரத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. சாலைகள் மகா மோசமாக சேதமடைந்துள்ளன.
இதையடுத்து அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 4ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் 5ம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நாள் பள்ளிகள் மூ்டப்பட்டு நாளை திறக்கப்படும்.
புதுவையில் புதன்கிழமையன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications