முஷாரப் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் இம்ரான் கான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவம் முயன்று வருவதாக பிரதமர் கிலானி கூறி வரும் நிலையில், அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியும், முன்னாள் அதிபருமான முஷாரப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெஹ்ரிக் ஏ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுப் ராசா கிலானி பிரதமராக உள்ளார். இதே கட்சியைச் சேர்ந்த சர்தாரி அதிபராக உள்ளார்.
இந்த ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத் தளபதி ஜெனரல் அஸ்வாக் பர்வேஸ் கியானி திட்டமிட்டுள்ளதாக பிரதமரே குற்றம் சாட்டி வருகிறார்.
இந் நிலையில் 2009ம் ஆண்டு முதல் லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் அதிபர் முஷாரப் இந்த மாதமே நாடு திரும்பவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் கூறி வருகிறார்.
இந் நிலையில் அவருடன் கூட்டணி அமைக்க இம்ரான் கானும் தயாராகி வருகிறார்.
இத் தகவலை அந்தக் கட்சியின் புதிய துணைத் தலைவரான ஷா முகம்மத் குரேஷி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications