கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை தமிழகம் பலவீனமாக கருதக்கூடாது என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி சங்கனாசேரியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டுடன் சுமூக உறவு தொடர வேண்டும் என்பது தான் கேரளாவில் உள்ள அனைவரும் விரும்புகின்றனர். தண்ணீர் ஒரு விலை மதிப்பற்ற பொருள் என்பதை தமிழகம் உணர வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு இன்று தண்ணீர் கொடுப்பது போல தொடர்ந்து வழங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணையை நம்பிதான் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள மக்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் கவலையை தமிழ்நாடு கண்டு கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கேரளாவின் கவலையை தமிழகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக சில தவறான கருத்துகள் தமிழ்நாட்டில் பரப்பப்படுகின்றன.
கேரளா குறித்து சில தவறான எண்ணங்களும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. அந்த கருத்துகளை மாற்றுவதற்கு தான் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு உடனடியாக பதிலும வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் சில பத்திரிக்கைகளில் வந்த தவறான செய்திகளை அடிப்படையாக வைத்து தான் அவர் பதில் அளித்துள்ளார்.
கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக மோசமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக் கூடாது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு இதுதான் கேரளாவின் நிலைப்பாடு ஆகும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications