18ம் தேதிக்குப் பதில் 30ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் வருகிற 18ம் தேதிக்குப் பதில் 30ம் தேதி தொடங்கும் என்று சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் வருகிற 18ம்தேதி தொடங்கும், அன்று ஆளுநர் கே.ரோசய்யா உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதிக்குப் பதில் 30ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் கே.ரோசய்யா தொடக்க உரை நிகழ்த்துவார்.
இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இது என்பதோடு, ஆளுநர் கே. ரோசய்யா ஆளுநர் பதவியில் அமர்ந்த பின்னர் நடைபெறும் முதல் கூட்டமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications