சீனாவில் ஒரு வருடமாக சிக்கித் தவித்த 12 குஜராத் வைர வியாபாரிகள் நாடு திரும்பினர்
டெல்லி: சீன சிறையில் கடந்த ஒரு வருடமாக அடைபட்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த 12 வைர வியாபாரிகள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களை மும்பை விமான நிலையத்தில் உறவினர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த 22 வைர வியாபாரிகள் சீனாவில் கைது செய்யப்பட்டனர். 7.3 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரத்தை சீனாவுக்கு கடத்தி வந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹாங்காங்கிலிருந்து இந்த வைரத்தை சட்டவிரோதமாக வாங்கி சீனாவில் விற்க வந்ததாக அவர்கள் மீது புகார் சுமத்தி வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சமீபத்தில் ஷென்ஷென் கோர்ட் இவர்களில் 12 பேர் அப்பாவிகள் என்று கூறி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் மும்பை திரும்பினர்.
22 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் தொடர்ந்து சீன அரசை வலியுறுத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம்.
சமீபத்தில்தான் மும்பையைச் சேர்ந்த இரண்டு இந்திய வியாபாரிகளை, சீனர்களின் பிடியிலிருந்து இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரன் தனது உயிரையும் பணயம் வைத்து மீட்டார் என்பது நினைவிருக்கலாம். அந்த சம்பவத்திற்குப் பின்னர் அடுத்த நாள் இந்த 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications