முல்லை பெரியாறில் புது அணை-ஐவர் குழுவிடம் கேரளா இன்று அறிக்கை தாக்கல்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழுவிடம் வெள்ளிக்கிழமையன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.
கண்ணூரில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணை பலகீனமாக இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணை உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு கூறி வந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழு கூட்டத்தில் முதன் முதலாக புதிய அணை குறித்து பரீசிலிக்கப்பட்டது. இது கேரளா பல ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுபாட்டை யாருக்கு அளிப்பது என்பது குறித்து 6ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர் அதிகார குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்ற குழுவிடம் கேரளா அரசு அறிக்கை தாக்கல் செய்யும். அதில் புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுபாடு தமிழ்நாடு, கேரளா, மற்றும் மத்திய அரசு இணைந்து ஏற்கலாம் என்று தெரிவிக்கப்படும்.
ஏற்கனவே பரப்பிக்குளம்-ஆழியாறு, சிறுவாணி ஆகிய அணைகளும் இதுபோல் தான் தமிழ்நாடு, கேரள கூட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல் புதிய அணை கூட்டுக் கட்டுபாட்டில் செயல்படலாம் என்றார் அவர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications